ராகுல் நாளை பெங்களூர் வருகை

ராகுல் நாளை பெங்களூர் வருகை
Updated on
1 min read

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை பெங்களூர் வருகிறார்.

காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 250 பேருக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். பிற்பகல் 2 மணிக்கு இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதைத் தொடர்ந்து கட்சிக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் எதிர்வரும் தேர்தல் குறித்தும் அவர் ஆலோசிக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in