

டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராக டெல்லி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் முன்பு டிடிவி தினகரன் நேற்று ஆஜரானார். அவரிடம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 10 மணிக்கு முடிந்தது. சுமார் 7 மணி நேரம் அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து மீண்டும் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி தினகரனை போலீஸார் அனுப்பி வைத்தனர். தினகரன் மற்றும் கைது செய்யப்பட்ட சுகேஷ் ஆகியோரின் செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் விவரங்களை போலீஸார் ஆய்வுசெய்து வைத்திருந்தனர். அது தொடர்பாக தினகரனிடம் விசாரணை நடத்தினர். மேலும், சில கேள்விகள் அடங்கிய தாளை தினகரனிடம் கொடுத்து, அதற்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.