

பழங்குடியின பெண் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் காவல் துறை நடவடிக்கை குறித்து 2 வாரத்திற்குள் விளக்கமளிக்குமாறு மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில், வேறு சாதி இளைஞரை காதலித்த குற்றத்திற்காக பழங்குடியின பெண் ஒருவருக்கு உள்ளூர் பஞ்சாயத்தில் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் அந்த அபராத தொகையை இளம் பெண் குடும்பத்தாரால் செலுத்த முடியாததால், சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை அந்த ஊர் ஆண்கள் பலாத்காரம் செய்வார்கள் என தண்டனை அளிக்கப்பட்டது.
பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 13 பேர் இளம் பெண்ணை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 13 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், போலீஸ் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 2 வார காலத்திற்குள் விளக்கமளிக்குமாறு மாநில தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.