

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம் தனது பயணத்தில் நூறாவது நாளை இன்று நிறைவு செய்தது.
‘மங்கள்யான்’ விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த நவம்பர்- 5.ல் விண்ணில் ஏவப்பட்டது.
வெற்றிகரமாக இன்று 100-வது நாளாக விண்ணில் செவ்வாய் நோக்கி பயணிக்கும் மங்கல்யான், இதுவரை 190 மில்லியன் கி.மீ பயணித்துள்ளது, இன்னும் 680 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை அடுத்த 210 நாட்களில் கடக்க வேண்டும் என இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மங்கல்யான் விண்கலத்தின் செயல்பாடுகளை பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள டிராக்கிங் மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.