Published : 21 Jun 2016 10:55 AM
Last Updated : 21 Jun 2016 10:55 AM

135 நாடுகளில் யோகா தினம் கொண்டாட்டம்: சர்வதேச, தேசிய அளவில் யோகாவுக்கு விருதுகள்- பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

இரண்டாவது சர்வதேச யோகா தினம் 40 முஸ்லிம் நாடுகள் உட்பட 135 நாடுகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது. சண்டீகரில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சி களை முன்னின்று நடத்திய பிரதமர் மோடி, யோகாவுக்காக சிறப்பான பங்களிப்பைச் செய்பவர் களுக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவில் இரண்டு விருதுகள் இந்திய அரசால் அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும் என அறிவித்தார்.

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு அறிவித்தது. நேற்று 2-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுக்க சுமார் 135 நாடுகளில் கொண்டாடப்பட்டது.

சண்டீகரில் கேபிடல் காம்ப் ளெக்ஸ் வளாகத்தில் நேற்று நடை பெற்ற யோகா தின நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாண வர்கள், பாதுகாப்புப் படையினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் அதிகமா னவர்கள் பங்கேற்றனர்.

சண்டீகரில் மழை மிரட்டியதால் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுமா என சந்தேகம் இருந்தது. ஆனால், நிகழ்ச்சிகள் முடியும் வரை மழை பெய்யவில்லை. நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் மழை பெய்யத் தொடங்கியது.

யோகா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

யோகா மதம் தொடர்பான செயல்பாடு அல்ல. பெரும்பாலா னவர்கள் யோகாவை முழுமை யாகப் புரிந்துகொள்ளவில்லை. யோகாவால் என்ன கிடைக்கும் என்பது முக்கியம் அல்ல. நீங்கள் யோகாவால் என்ன இழக்கிறீர் கள் (நோய்களை) என்பதுதான் முக்கியம்.

மத நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் என யோகா அனை வருக்குமானது. இதுதொ டர்பாக சர்ச்சை களை எழுப்பத் தேவையில்லை. உடல்நல பிரச்சினைகளுக்கு யோகா தீர்வ ளிக்கிறது. யோகா என்பது மறுமை பற்றி யதல்ல. எனவே, இது மதம் சார்ந்த செயல்பாடு அல்ல. இது இந்த உலகின் அறிவியல்; இந்த உலகில் நாம் என்ன பெறுகிறோம் என்பது தொடர்பானது. யோகாவை வாழ்வின் ஓர் அங்கமாக்குங்கள். செல்போன் எப்படி வாழ்வின் அங்க மாகியுள்ளதோ, அதைப்போல யோகாவும் மாற வேண்டும்.

சர்க்கரை நோய்

அடுத்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்படும் வரை ஓராண்டு அவகாசம் உள்ளது. அதுவரை நீங்கள் வழக்கமான யோகா செயல்பாடு களை மேற் கொள்ளுங்கள். அத்துடன் சர்க்கரைநோய் தொடர்பாக கவனம் செலுத்துங்கள். இந்தியாவில் சர்க்கரை நோயா ளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக் கிற து. தினசரி யோகா செய்வதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எனவே, இந்நோயைக் கட்டுக்குள் கொண்டுவர யோகா ஆசிரியர்கள் உதவ வேண்டும்.

வழக்கமான யோகா செயல் பாடுகளுடன், சர்க்கரை நோய் கட்டுப்பாடு நமது பிரதான இலக்காக இருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு முதல் நாம் வேறொரு நோயை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நோயை எடுத்துக் கொண்டு, அதற்குத் தீர்வு காண்போம். இதுதொடர்பாக நாம் பிரச்சாரம் மேற்கொள்வோம்.

உடலையும் மனதையும் கட்டுப்படுத்த உதவுவது யோகா. மக்கள் ஒழுக்கமான வாழ்வைப் பேண யோகா உதவுகிறது. உடல் உறுதியை மட்டுமே பேணாமல், மனம், உடல், அறிவு, ஆன்மா ஆகிய வற்றைப் பிணைக்கிறது. எவ்வித செலவு மின்றி உடல், மன ஆரோக்கியத்தை அளிக்கிறது.

யோகா பயிற்றுநர்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் உலக அளவில் பெரும் பொருளாதார செயல்பாடாகவும் யோகா உருவாகியுள்ளது.

உலகின் அனைத்து நாடுக ளிலும் சர்வதேச யோகா தினத் தையொட்டி, மக்கள் யோகாவில் பங்கெடுத்துள் ளனர்.

2 விருதுகள் அறிவிப்பு

ஐ.நா. பல்வேறு சர்வதேச தினங்களை அறிவித்துள் ளது. அவற்றில் எதுவும், யோகா தினத்துக்கு சமமான தாக இல்லை. யோகா தினம் உலகம் தழுவிய அளவில் பேரியக்கமாக மாறியுள்ளது. விலை மதிக்க முடியாத மரபுச்செல்வத்தை உலகுக்கு அளித்துள்ளது. இதனை உலகம் தங்களது வழியில் ஏற்றுக் கொண்டுள்ளது. நமது தரப்பில், இந்திய அரசின் பங்காக இரு விருதுகளை அறிவிக்கிறேன். அடுத்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண் டாடப்படும்போது, இந்தியா 2 பேரைத் தேர்வு செய்து விருது அளிக்கும்.

ஒன்று சர்வதேச அளவிலா னது. யோகாவுக்கு சிறப்பான பங்களிப் பைச் செய்தவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படும். மற்றொன்று தேசிய அளவிலானது. அதாவது, சர்வதேச யோகா விருதுஒன்று, தேசிய யோகா விருது மற்றொன்று.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

உரையை முடித்துக்கொண்ட பிறகு, விவிஐபி பகுதியில் யோகா செய்த வர்களைத் தவிர்த்துவிட்டு, பின்வரிசை யில் யோகா செய்த மற்றவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகாசனம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். இவர் களில் 30 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். சண்டீகர், பஞ்சாப், ஹரியாணாவில் இருந்து தலா 10 ஆயிரம் பேர் தேர்ந்தெ டுக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சியில் பஞ்சாப், ஹரியாணா ஆளுநர் கப்டன் சிங்சோலங்கி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x