Published : 12 Dec 2013 02:55 PM
Last Updated : 12 Dec 2013 02:55 PM

சரத் பவார், ரஜினிகாந்துக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய அமைச்சர் சரத் பவார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு, குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:

மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறேன். அவர் நலமுடன் நீண்டநாள் வாழ்வதற்கு ஆசிர்வதிக்கப்படுவார் என்று நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ஜி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நலமுடன் நீண்டநாள் வாழ வேண்டும் என வாழ்த்துகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x