

“பினாமி பெயரில் சொத்துகள் வாங்கினால் சம்பந்தப்பட்டவர் களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் மற்றும் 25 சதவீத அபராதம் விதிக் கப்படும். அத்துடன் பல்வேறு சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்க, ‘பினாமி சொத்து பரிவர்த் தனை சட்டம் -1988’ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து நாட்டின் முன் னணி பத்திரிகைகளில் வருமான வரித் துறை விளம்பரம் வெளியிட் டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:
பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. எனவே, பினாமி சொத்து பரிவர்த்தனையில் ஈடு படாதீர்கள். கறுப்புப் பணம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம். எனவே, கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசுக்கு உதவும்படி ஒவ்வொரு குடிமகனையும் வருமான வரித் துறை கேட்டுக் கொள்கிறது.
புதிய சட்டத்தின்படி பினாமி தாரர் (யார் பெயரில் சொத்து உள்ளதோ அவர்), பயனாளர் (சொத்துக்கு உண்மையான உரி மையாளர்) மற்றும் பினாமி பரிவர்த் தனைக்கு உதவி செய்வோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அத்துடன் சொத் தின் சந்தை மதிப்பில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும், வருமான வரிச் சட்டங்களின் கீழ் மற்ற நடவடிக்கைகளும் எடுக்கப் படும்.
தவிர சொத்து பரிவர்த்தனை களின் போது அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளிப்ப வர்களுக்கு பினாமி சட்டத்தின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் சொத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். பினாமி பெயரில் பரிவர்த்தனைகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் சொத்துக்கள் முடக்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும். அத்துடன் வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு வருமான வரித் துறை விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
பினாமி சட்டம் அமலுக்கு வந்த பின்னர் கடந்த பிப்ரவரி 2-வது வாரம் வரை நாடு முழுவதும் 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துக் கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், வேளாண் நிலம், மற்ற நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கள், நகைகளும் அடங்கும். தவிர 140 வழக்குகளில் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கு வது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது என்று வருமான வரித் துறை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.