

டெல்லி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப்பெறப் போவதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறுகையில்: டெல்லி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் தனது முடிவு குறித்து இன்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு கடிதம் மூலம் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.
அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல்வாதிகளை விட ஆபத்தானவர் என குற்றம் சாட்டியுள்ள பின்னி
இருப்பினும் அன்னா ஹசாரேவின் லோக்பால் மசோதாவை அவையில் ஆம் ஆத்மி கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சிக்ளை எடுக்காவிட்டால் 48 மணி நேரத்துக்குள் டெல்லி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறப் போவதாக பின்னி ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.