பாதுகாப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

பாதுகாப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
Updated on
1 min read

அதிகரித்து வரும் தீவிரவாத சவால் களை முறியடிக்க தேசிய புலனாய்வு முகமை போன்ற பாதுகாப்பு அமைப்பு கள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய புலானய்வு முகமையின் (என்ஐஏ) துவக்க தினத்தை முன் னிட்டு டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசிய தாவது:

கடந்த 2009, ஜனவரி 19-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அமைக்கப் பட்டது. அப்போது முதல் நேர்த்தியாக தன் பணிகளை என்ஐஏ செய்து வரு கிறது. எனினும் அதிகரித்து வரும் தீவிரவாத சவால்களை முறியடிக்க என்ஐஏ போன்ற பாதுகாப்பு அமைப்பு களுக்கு கூடுதல் பலம் தேவைப்படு கிறது. அதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக பாது காப்பு அமைப்புகளின் பலத்தை அதி கரிக்கும் வகையில் நவீன உபகரணங் கள் வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. தீவிரவாதம் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் சாபக்கேடானது. அதனை வேரறுக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீவிரவாதம் போன்ற பிற பாதுகாப்பு விவகாரங்களை சமாளிக்க தேசிய பாதுகாப்பு நிர்வாக சேவை அமைக்கப்பட வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா தெரிவித்த ஆலோசனைக்கு, நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in