திருநங்கைகள் மசோதா மக்களவையில் தாக்கல்

திருநங்கைகள் மசோதா மக்களவையில் தாக்கல்
Updated on
1 min read

திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

சமூக நீதித்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் இந்த மசோதாவை அறிமுகம் செய்தார். திருநங்கைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதை இந்த மசோதா தடை செய்கிறது. திருநங்கைகளுக்கு தனி அடையாளம் வழங்குவதன் மூலம் அவர்களை அதிகாரம் பெறச் செய்வதும் அவர்களைச் சுரண்டு வோரை தண்டிப்பதற்கான நடை முறையை உருவாக்குவதும் இந்த மசோதாவின் நோக்கம் ஆகும்.

திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் மசோதா கடந்த 2015, ஏப்ரல் 14-ல் நிறை வேற்றப்பட்டது. 45 ஆண்டுகளுக் குப் பிறகு முதன்முறையாக தனிநபர் மசோதா நிறைவேறியது.

அப்போது, விரிவான ஆலோ சனைக்குப் பிறகு அரசே இது தொடர்பான மசோதாவை கொண்டு வரும் என உறுதி அளிக்கப்பட் டது. இந்நிலையில் அரசு சார்பில் ‘திருநங்கைகள் (உரிமைகள் பாது காப்பு) 2016’ மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in