

பிஹார் ஆளுநர் பதவியை ராம்நாத் கோவிந்த் ராஜினாமா செய்தார். பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
பிஹார் மாநில ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக மேற்குவங்க மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 24-ம் தேதியுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.