மூத்த திமுக பேச்சாளர் ‘எரியீட்டி’ தேவராஜன் காலமானார்

மூத்த திமுக பேச்சாளர் ‘எரியீட்டி’ தேவராஜன் காலமானார்
Updated on
1 min read

கர்நாடக மாநில மூத்த திமுக நிர்வாகியும் திமுக தலைமை கழகப் பேச்சாளருமான ‘எரியீட்டி' தேவராஜன் (85) உடல் நலக்குறைவால் பெங்களூருவில் நேற்று முன்தினம் காலமானார்.

பெங்களூருவைச் சேர்ந்த ‘எரியீட்டி' தேவராஜன், திமுகவில் மூத்த நிர்வாகியாகவும், முக்கிய பேச்சாளராகவும் திகழ்ந்தவர். கர்நாடகாவில் திராவிட இயக் கங்கள் காலூன்ற தொடங்கிய காலத்திலேயே அதில் இணைந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் இருந்த இவர், எரிமலை கொந்தளிப்பதைப் போன்ற தனது மேடைப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். இதனால் திமுகவின ரால் ‘எரியீட்டி தேவராஜன்' என அழைக்கப்பட்டார்.

பெரியார், அண்ணா, கருணா நிதி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய எரியீட்டி தேவராஜன் தன் வாழ்வின் இறுதி காலம் வரை பகுத்தறிவு கொள்கை யில் உறுதியுடன் இருந்தார். சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

சாதி மறுப்பை பேசியதோடு நில்லாமல், தனது மகன், மகள்கள் அனைவருக்கும் சுயமரியாதை முறைப்படி சீர்திருத்த திருமணம் செய்து வைத்தார்.

கர்நாடக மாநில திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித் துள்ள இவர் திமுகவின் தலைமை கழக பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டார். இவரது பணியை பாராட்டி கடந்த ஆண்டு கருணாநிதி இவருக்கு,

‘‘அறிஞர் அண்ணா விருதை'' வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் முதுமையின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த எரியீட்டி தேவராஜன் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

பெங்களூருவில் உள்ள விக்ரோ நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி, அவைத் தலைவர் பெரியசாமி, பத்திரிகையாளர் மதியழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதே போல பெங்களூரு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான திமுகவினரும், தமிழ் அமைப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எரியீட்டி தேவராஜனின் உடல் நேற்று மாலை பெங்களூருவில் உள்ள கல்பள்ளி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய எரியீட்டி தேவராஜன் தன் வாழ்வின் இறுதி காலம் வரை பகுத்தறிவு கொள்கையில் உறுதியுடன் இருந்தார். சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in