குஜராத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பழிவாங்கும் நோக்குடன் வெறிச்செயல்

குஜராத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பழிவாங்கும் நோக்குடன் வெறிச்செயல்
Updated on
1 min read

ஓடும் காரில் 6 பேர் இணைந்து 2 சிறுமிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குஜராத்தின் தாகூத் மாவட்டத்தில் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளின் சகோதரரைப் பழிவாங்குவதற்காக நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''தாகூத் பகுதியின் பிரபல சாராய வியாபாரி குமாட் பாரியா. சட்ட விரோதமாக கள்ளச்சாராயத் தொழிலில் அவர் ஈடுபட்டு வந்தார். அவரிடம் வேலைசெய்தவரை கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காகக் காவல்துறை கைது செய்தது. அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பாரியா பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த பாரியா மற்றும் அவரின் சகாக்கள் 5 பேர், கைதானவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் அவரின் தந்தையை ஜீப்பில் அடைத்துக்கொண்டு கிளம்பிச் சென்றனர்.

ஜீப் வனப்பகுதியை அடைந்தவுடன் 15 வயது சிறுமியை முதலில் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், அடுத்ததாக 13 வயது சிறுமியையும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். 6 பேரும் இணைந்து, ஓடும் வாகனத்தில் சுமார் 1 மணி நேரம் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் குற்றவாளியான பாரியா வியாழக்கிழமை அன்று குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தந்தையின் கண் முன்னாலேயே அவரின் இரண்டு மகள்களையும் கூட்டாக பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டது குஜராத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in