குடியரசு தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு - வான்வழி அச்சுறுத்தலை தடுக்க புது திட்டம்

குடியரசு தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு - வான்வழி அச்சுறுத்தலை தடுக்க புது திட்டம்
Updated on
1 min read

தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கொண்டாட்டத்தின்போது விமானம் மூலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து வான்வழி பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ராணுவத்தின் வல்லமையை பறைசாற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையில் நடத் தப்படும் கண்கவர் காட்சிகளை முப் படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அங்கு வந்து பார்வையிடுவார் என்பதால் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய மற்றும் புதுடெல்லி பிராந்திய பகுதிகளின் மூலை முடுக்குகளிலும் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில் டெல்லி காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளி லிருந்து 50,000 வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் வாடகை சேவைகள், வாடகை விமானங்கள் மூலமாக வான்வழியாக லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவு தகவல்கள் கிடைத்துள்ளதால், டெல்லி காவல் துறையினர் இதர பிற அமைப்புகளுடன் இணைந்து காண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

வானில் சந்தேகப்படும் பொருள் கள் பறப்பது தெரியவந்தாலோ அல்லது தாக்குதல் அபாயம் இருந்தாலோ அதை முறியடிக்க ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை போலீஸார் பயன்படுத்த உள்ளனர் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஏற்பாடுகள் தவிர உயர மான கட்டிடங்களின் கூரைகளில் பாதுகாப்புப்படை வீரர்கள் நிறுத்தப் பட உள்ளனர். அவர்கள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை ஏந்தியபடி கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். வானில் மர்ம பொருள்கள் ஏதேனும் பறந்து வந்தால் அதை சுட்டு வீழ்த்துவார்கள். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் கிடைக்கும் பதிவுகள் கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக கண்காணிக்கப்படும்.

தீவிரவாத அமைப்புகளும் கிரிமினல் குழுக்களும் பயன்படுத் தும் ஆயுதங்களும் மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்தை கொண்ட தாக இருக்கும் என்பதால், அவற்றின் அச்சுறுத்தல் தன்மையை பகுத்தாய்ந்து உரிய பதிலடி கொடுக்க திட்டமிடுவது பாதுகாப்புப் படையினரின் முக்கிய பணி என பாதுகாப்பு அமைப்புகளுக்கு சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் போன்று தீவிரவாதிகள் உடை அணிந்து தந்திரமாக ஏமாற்றக்கூடும் என்ப தால் போலீஸார், பாதுகாப்புப் படை வீரர்கள் என்றும் பாராமல் அவர் களையும் சோதனையிடுவது அவ சியம் என்றும் பாதுகாப்புப் படை யினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சில தீவிரவாத அமைப்புகள், 9/11 தாக்குதல் பாணியில் விமானங்களில் ஆயுதங்களையும் ஆட்களையும் ஏற்றிக்கொண்டு தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் விழிப்புடன் இருப்பது அவசியம் எனவும் பாதுகாப்பு படைகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in