

வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களிடம் இருந் தும் வரும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பான் எண்ணை கேட்டு பெற வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் நேரடி வரி வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘வரும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தற்போதுள்ள வங்கி கணக்குகள் அனைத்துக்கும் பான் எண் கேட்டுப் பெற வேண்டும்.
பான் எண் இல்லாத பட்சத்தில் பார்ம் 60 கேட்டுப் பெற வேண்டும். இதே போல் இதுவரை பான் எண் சமர்ப்பிக்காதவர்கள் உடனடியாக வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதே சமயம் அடிப்படை சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்குகள், பூஜ்ய நிலுவை சேமிப்பு கணக்குகள், ஜன்தன் வங்கி கணக்குகளுக்கு இந்த விதி பொருந்தாது’ என கூறப்பட்டுள்ளது.