சமையல் காஸ் மானிய தொகை சேமிப்பு ரூ.22,000 கோடியா? ரூ.2,000 கோடியா?- சிஏஜி அறிக்கையால் எழும் சந்தேகம்

சமையல் காஸ் மானிய தொகை சேமிப்பு ரூ.22,000 கோடியா? ரூ.2,000 கோடியா?- சிஏஜி அறிக்கையால் எழும் சந்தேகம்
Updated on
2 min read

சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் சேர்ப்பிப்பது மற்றும் அதிக வருவாய் உள்ளவர்கள் தாங்களாகவே மானியத்தை விட்டுக் கொடுப்பது ஆகிய இருமுக திட்டங்கள் மூலம் அரசு ரூ.22,000 கோடி சேமிப்பு என என்ற மத்திய அரசின் கோரல் மீது மத்திய தலைமை தணிக்கைக் குழு ஐயம் எழுப்பியுள்ளது.

நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மானியத்தை செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பின், 3.25 கோடி போலி நுகர்வோர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதன் மூலம் மானியத் தொகை சேமிக்கப்பட்டது. மேலும் 1 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர் தாமாக முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர், இந்த இருமுக திட்டங்களின் மூலம் அரசுக்கு ரூ.22,000 கோடி 2014-15, 2015-16 நிதியாண்டுகளில் மிச்சமாகும் என்று அரசு கோரியிருந்தது.

அதாவது, 2014-15 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் இந்த இருமுக சமையல் எரிவாயு மானியத் திட்டங்களின் மூலம் மத்திய அரசு ரூ.22,000 கோடி சேமிக்கும் என்று கோரியிருந்தது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் மழைகாலக் கூட்டத்தொடரின் போது சிஏஜி சமர்பித்த தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறும்போது, நேரடி மானியத் திட்டம், மக்கள் தாங்களாகவே மனமுவந்து கைவிடும் மானியம் ஆகியவற்றினால் அரசுக்கு கூடுதலாக ரூ.2,000 கோடிக்கும் குறைவாகவே சேமிப்பு கிட்டும் என்று தணிக்கையில் தெரியவந்துள்ளது என்கிறது. மற்ற சேமிப்புகள் இந்தியா ஆண்டுதோறும் இறக்குமதி செய்யும் எல்.பி.ஜி-யின் விலைசரிவுகளால் கிடைப்பதே என்று கூறப்படுகிறது.

மேலும் நேரடி மானியப் பயன் திட்டத்தில் தணிக்கையாளர்கள் சில பிரச்சினைகளையும் அடையாளங் கண்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் எல்.பி.ஜி. நேரடி மானிய பயன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் அறிமுகம் செய்யப்படாவிட்டால் அரசு 2014-15-ல் மட்டும் ரூ.15,000 கோடி இது தொடர்பாக செலவிட்டிருக்க வேண்டும், என்று சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

செங்கோட்டையில் பிரதமர் அப்போது பேசிய போதும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை எதிரொலித்தார்.

தணிக்கையும் உலக அளவில் எல்.பி.ஜி விலையும்

நேரடி மானிய பயன் குறித்தும், தாமாகவே முன்வந்து மானியத்தைத் துறப்பவர்களினால் ஏற்படும் சேமிப்பு குறித்தும் அரசு வகைவகையாக சாதகமாகக் கூறிக்கொண்டாலும் தணிக்கைக்குழு அறிக்கையின் படி அரசுக்கு ஏற்படும் சேமிப்பு, எல்.பி.ஜி. இறக்குமதி விலை பெருமளவுக்கு சரிவு கண்டதே காரணம் என்கிறது.

பெட்ரோலியம் திட்டமிடுதல் மற்றும் ஆய்வுப் பிரிவு (Petroleum Planning and Analysis Cell-PPAC) தகவல்களின்படி, 2014-15-ல் எல்.பி.ஜி. இறக்குமதி மதிப்பு ரூ.36,571 கோடியாக இருந்தது விலை சரிவின் காரணமாக உத்தேச மதிப்பின்படி ரூ.25,626 கோடியாக குறைந்துள்ளது. அதாவது விலை சரிவினால் ஒரே ஆண்டில் ரூ.10,945 கோடி அரசு மிச்சம்பிடித்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் இத்தனைக்கும் எல்.பி.ஜி. இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும் பெட்ரோலிய திட்டமிடுதல் மற்றும் ஆய்வுப் பிரிவு கூறுகிறது. அதாவது 2014-15-ல் 8,313 மெட்ரிக் டன்களாக இருந்த இறக்குமதி 2015-16-ல் 8,885 டன்களாக அதிகரித்துள்ளது. அதாவது விலைசரிவு காரணமாக இறக்குமதி அதிகரித்தும் கூட அரசு மிச்சம்பிடிக்க முடிந்துள்ளதே இந்த தகவலின் உள்விவரமாகும்.

சவுதி ஆரம்கோ ஒப்பந்த விலையின் படி புடேன் விலை 60% மற்றும் புரொபேன் விலை 40%-ம் சரிவு கண்டுள்ளன.

அதாவது மெட்ரிக் டன் ஒன்றிற்கு 2014 மே மாதவாக்கில் 825 டாலர்களாக இருந்த புடேன் சமையல் எரிவாயு விலை ஜூலை 2016-ல் மெட்ரிக் டன்னிற்கு 310 டாலர்களாக குறைந்துள்ளது. அதே போல் புரொபேன் விலை 2014-மே-மாதவாக்கில் 810 டாலர்களாக இருந்தது 295 டாலர்களாக ஜூலை 2016வாக்கில் குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in