Last Updated : 06 Jul, 2015 08:39 AM

 

Published : 06 Jul 2015 08:39 AM
Last Updated : 06 Jul 2015 08:39 AM

மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கு: மருத்துவக் கல்லூரி டீன் மர்ம மரணம் - இதுவரை 34 பேர் திடீரென இறந்ததால் பரபரப்பு

மத்தியப் பிரதேசத்தில் ‘வியாபம்’ ஊழல் குறித்த விசாரணைக்கு உதவிவந்த மருத்துவக் கல்லூரி டீன் மர்மமான முறையில் டெல்லி ஹோட்டலில் நேற்று காலை இறந்து கிடந்தார்.

மத்தியப் பிரதேச மாநில தொழில் முறை தேர்வு வாரியம் (வியாபம்), அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் ஏராளமானோர் பணம் கொடுத்து பணி நியமனம் பெற்றதாக குற்றச் சாட்டு எழுந்தது. பல கோடி ரூபாய்க்கு நடந்த இந்த ஊழலில் அரசியல் தலைவர்கள், உயரதிகாரி கள் உட்பட பல தரப்பினரும் சம்பந் தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இது குறித்து மத்தியப் பிரதேச சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வியாபம் ஊழல் விசாரணைக்கு தகவல்களை அளித்து உதவி வந்த மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அருண் சர்மா, டெல்லி ஹோட்டலில் நேற்று காலை மர்மமமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “மேற்கு டெல்லி துவாரகா பகுதியில் உள்ள ஹோட்டலில் அருண் சர்மா இறந்துகிடந்தார். அவருக்கு அருகில் காலி மது பாட்டில் இருந்தது. மேலும், அவர் வாந்தி எடுத்துள்ளார். தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்துள்ளனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

அருண் சர்மா, ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத் துவக் கல்லூரி டீனாக இருந்தார். நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு கள் செய்தும், பணம் கொடுத்தும் பணி நியமனம் பெற்றவர்கள் குறித்த விவரங்களை இவர் விசாரணைக் குழுவுக்கு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வியாபம் ஊழல் தொடர்பாக டெல்லி தனியார் சேனல் செய்தி யாளர் அக் ஷய் சிங் என்பவர், மர்ம மரணம் அடைந்த மாணவி நம்ருதா தாமோரின் பெற்றோரிடம் 2 நாட் களுக்கு முன்னர் பேட்டி எடுத்திருந் தார். அதன்பின் அக் ஷய் சிங்கும் மர்மமான முறையில் இறந்துவிட் டார். இந்த பரபரப்பு அடங்குவதற் குள் மறுநாளே மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா இறந்தது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மேலும், வியாபம் ஊழலில் மர்ம மான முறையில் இறந்த 2-வது டீன் அருண் சர்மா என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கெனவே கடந்த ஆண்டு அதே கல்லூரியில் டீனாக இருந்த டி.கே.சக்லே தனது வீட்டில் மர்ம மான முறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இவரும் மருத் துவக் கல்லூரி சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வந்தார்.

இதுகுறித்து ஜபல்பூர் மாவட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலை வர் சுதீர் திவாரி நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “டீன் அருண் சர்மா இறந்தது அதிர்ச்சி அளிக் கிறது. இதுவும் கொலையாகத்தான் இருக்கும். ஏற்கெனவே இறந்த சக்லேவுக்கு சர்மா மிகவும் நெருங் கிய நண்பராக இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வியாபம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த அறிக்கையை சிறப்பு விசா ரணைக் குழுவிடம் அருண் சர்மா சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் அவர் மர்மமாக இறந்தது அதிர்ச்சியாக உள்ளது” என்றார்.

அருண் சர்மாவையும் சேர்த்து வியாபம் ஊழலில் தொடர்புடைய வர்கள் மற்றும் சாட்சிகள் என 34 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளனர். எனவே, இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

டீன் அருண் சர்மா இறந்த தகவல் கிடைத்தவுடன், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, “இந்த ஊழல் வழக்கை மாநில சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. சிபிஐ உட்பட வேறு ஏதாவது புல னாய்வு ஏஜென்சிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டாலும் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. வியாபம் ஊழலில் நடந்த இறப்பு ஒவ்வொன்றும் துரதிர்ஷ்டவச மானது, சோகமானது. இதுவரை இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்” என்றார்.

அக் ஷய் சிங் உடல் தகனம்

இதனிடையே செய்தியாளர் அக் ஷய் சிங்கின் உடல் டெல்லியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக தலை வர் சதீஷ் உபாத்யாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x