

டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளில் 73 திருட்டுச் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் 26 பேர் கைதாகி இருப்பதாகவும் மத்திய அரசு நேற்று தெரிவித்தது.
மக்களவை நேற்று கூடிய தும் இந்த விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், ‘‘டெல்லியில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க் களின் வீடுகளில் கடந்த 3 ஆண்டுகளாக திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. 2014-ம் ஆண்டில் 25 வழக்குகளும், 2015 மற்றும் 2016-ல் முறையே 29 மற்றும் 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸார் வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவங்கள் தொடர் பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 2 வழக்குகள் பதிவாகி யுள்ளன. திருட்டு சம்பவங்களைத் தடுக்க எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க் களின் வீடுகள் அமைந்திருக்கும் டெல்லியின் வடக்கு மற்றும் தெற்கு அவின்யூ பகுதிகளில் முழு நேரமும் செயல்படும் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர தீவிர ரோந்து பணிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.