

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை நிலவுகிறது.
இந்த சூழலில் கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச் சந்திரா பெங்களூருவில் நேற்று ‘தி இந்து'விடம் கூறியதாவது:
காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட வரைவு இறுதி அறிக்கை இன்னும் ஒரு சில தினங்களில் இறுதி செய்யப்படும். அதன் பின் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக முதல்வர் சித்தராமையா வருகிற 9-ம் தேதி பெங்களூருவில் கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக ஆலோசிக் கப்படும் என்றார்.