கேரளாவில் மகளுக்கு ஆடம்பர திருமணம்: கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுக்கு சிக்கல்

கேரளாவில் மகளுக்கு ஆடம்பர திருமணம்: கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுக்கு சிக்கல்
Updated on
1 min read

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிக்கா தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கீதா கோபி. இவர் அண்மையில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தனது மகளின் திருமணத்தை நடத்தினார். இதற்காக தனது மகளுக்கு 50 சவரனுக்கு மேல் நகைகளை அணிவித்து மண மேடையில் அமரவைத்தார். இதில் கலந்துகொண்ட மாநில அமைச்சர்களும், எம்எல்ஏக் களும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்தைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

கீதா கோபியின் மகள் உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை அணிந்திருந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இதைத் தொடர்ந்து அண்மை யில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முல்லாக்கரா ரத்னாகரன், கீதா கோபி மகளின் திருமண புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி ‘‘இத்தகைய ஆடம்பர திருமணங் களை நிறுத்த முதல்வர் பினராயி விஜயன் வழி கண்டுபிடிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதேபோல் அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலரு மான கே.எம்.ஷாஜஹான், ‘‘பணம் படைத்த வணிகரின் திருமணமோ என்று நினைக்கும் அளவுக்கு கோபியின் மகள் உடல் முழுவதும் ஆபரணங்களை அணிந்திருந்தார். யாரும் இதுவொரு கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவின் திருமணம் என நினைத்திருக்க மாட்டார்கள். அனைவருக்குமே இந்த திருமணம் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருக்கிறது’’ என விமர்சித் துள்ளார்.

அதேசமயம் ஒரு தாய் என்ற முறையில் தனது மகள் திருமணத்தை நடத்தி வைத்தது தவறா என கீதா கோபி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மகள் அணிந்திருந்த பெரும்பாலான நகைகள் உறவினர்களிடம் இருந்து அன்பளிப்பாக வந்தவை என்றும் பதில் அளித்துள்ளார்.

எனினும் இந்த திருமணம் தொடர்பாக விசாரணை நடத்தும் படி திருச்சூர் மாவட்ட கட்சி நிர்வாகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in