

தண்ணீர் தொட்டி ஊழல் தொடர் பான விசாரணைக்கு ஆஜராகு மாறு, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, தண்ணீர் தொட்டிகள் வாங்குவது, தண்ணீர் மாணி வாங்குவதில் முறைகேடு கள் நடந்ததாக புகார் எழுந்தது. முதல்வர் ஷீலாவின் உத்தரவின் படி டெல்லி ஜல் போர்டு செயல் பட்டதால், அரசுக்கு ரூ.400 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.
இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஷீலா தீட்சித் மற்றும் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் சிலருக்கு ஊழல் தடுப்புப் பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் சிறப்பு ஆணையம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் எம்.கே.மீனா நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘ரூ.400 கோடி ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, முன்னாள் முதல்வர் ஷீலாவுக்கு நேற்றே (புதன்கிழமை) நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இந்த ஊழல் புகாரில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இருவரிடமும் விசாரணை நடத்தப்படும். வரும் 26-ம் தேதி அவர்களிடம் விசாரணை நடக்கும்’’ என்றார்.
‘‘விசாரணைக்கு ஷீலா தீட்சித் வராவிட்டால் என்ன செய்வீர்கள்?’’ என்று செய்தி யாளர்கள் கேட்டனர். அதற்கு மீனா பதில் அளிக்கையில், ‘‘எதை யும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. சட்டப்படி நாங்கள் நட வடிக்கை எடுப்போம்’’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளை ஷீலா தீட்சித் மறுத்துள்ளார்.