

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப் பூர் மாவட்டத்தில் உள்ள கவுரி பிதனூரைச் சேர்ந்தவர் கீதா (19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை படித்து வந்த இவர் மூன்று மாத கருவை வயிற்றில் சுமந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது காதலர் நரேஷ் (29) கொடுத்த கர்ப்பத் தடை மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனால் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டு கடந்த திங்கள்கிழமை பள்ளியிலேயே கீதா மயங்கி விழுந்தார்.
கவுரிபிதனூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டிருந்த இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கீதாவின் பெற்றோர் நரேஷூக்கு எதிராக கவுரிபிதனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் நேற்று நரேஷை கைது செய்யக்கோரி அவரது வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து கவுரிபிதனூர் துணை காவல் ஆய்வாளர் அவி னாஷ் தலைமையிலான போலீ ஸார் நரேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கீதாவுக்கு எத்தகைய கர்ப்பத் தடை மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தார்? அவை தடை செய்யப்பட்ட மாத்திரைகளா? வேறு ஏதாவது மருந்தை கொடுத்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.