Last Updated : 25 May, 2017 10:23 AM

 

Published : 25 May 2017 10:23 AM
Last Updated : 25 May 2017 10:23 AM

ஷீனா போரா வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி படுகொலை

மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த போலீஸ் ஆய்வாளரின் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் இளம் பெண் ஷீனா போரா பாதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதை போலீஸ் ஆய்வாளர் தியானேஷ்வர் கனோர் கண்டுபிடித்தார். மேலும் இந்த கொலை வழக்கை விசாரணை நடத்திய குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் கார் போலீஸ் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் பணி முடித்ததும் அதிகாலை 3.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளார். நெடுநேரம் கதவு தட்டியும் அவரது மனைவி தீபாளி கனோர் திறக்கவில்லை. பின்னர் தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொள்ள முயன்றார். அதுவும் பலன் அளிக்கவில்லை. கடைசியில் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தீபாளி ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அதிர்ச்சி அடைந்த தியானேஷ்வர் உடனடியாக சக போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாயமான தியானேஷ்வரின் மகன் தான் இந்த படுகொலையை செய்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக் கின்றனர். இவர் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயை நச்சரித்து வந்ததாகவும், பொறியில் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தா மல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x