என் சொத்துக்கள் எல்லாம் மகன், மகளுக்கு சமமாக பங்கிடப்படும்: அமிதாப் பச்சன் திட்டவட்டம்

என் சொத்துக்கள் எல்லாம் மகன், மகளுக்கு சமமாக பங்கிடப்படும்: அமிதாப் பச்சன் திட்டவட்டம்
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் மகன், மகளுக்கு சரிசமமாகப் பங்கிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுடன் திரையுலகில் மெகா ஸ்டாராக இருப்பவர் அமிதாப் பச்சன். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா என்ற மகளும் உள்ளனர். சமுதாயத்தில் ஆண் பெண் வேறுபாடு பார்க்க கூடாது என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார் அமிதாப். இந்நிலை யில், தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் மகனுக்கும் மகளுக் கும் சரிசமமாகப் பங்கிடப்படும் என்று நேற்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் பெண் குழந்தைகளின் தூதுவராக 74 வயதாகும் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய மனைவி பிரபல நடிகை ஜெயா பச்சன். இந்நிலையில், ஒரு அட்டையை கையில் வைத்துள்ளபடி தன்னுடைய புகைப்படம் ஒன்றை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அந்த அட்டையில், ‘‘நான் இறந்தால், என் சொத்துக்கள் அனைத்தும் மகன், மகளுக்கு சமமாக பங்கிட வேண்டும். பாலியல் சமத்துவம். நாம் சரிசமம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதே புகைப்படத்தைத் தன் னுடைய அதிகாரப்பூர்வ வலைப் பூவிலும் (பிளாக்) அமிதாப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமிதாப்பின் மகன் அபிஷேக்கும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா பச்சன் முன்னாள் உலக அழகி. இவர்களுக்கு ஒரு மகள் இருக் கிறாள். அமிதாப்பின் மகள் ஸ்வேதாவுக்கு திருமணம் ஆகி விட்டது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in