காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி கைது

காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி கைது
Updated on
1 min read

காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் உரி ராணுவ முகாம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லைப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை பிராக்வல் எல்லையில் ஓர் இளைஞர் காஷ்மீருக்குள் ஊடுருவ கம்பி வேலியை அறுத்துக் கொண் டிருந்தார். அவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்தனர்.

விசாரணையில் அவர் பாகிஸ் தானின் பஞ்சாப் மாகாணம், சியால் காட் பகுதியைச் சேர்ந்த அப்துல் கயாம் (32) என்பது தெரியவந்தது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபடும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் ஹபீஸ் சையது, சையது சலாவுதீன் மற்றும் காஷ்மீர் பிரிவினைத் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, யாசின் மாலிக் ஆகியோருடன் அப்துல் கயாமுக்கு தொடர்பு உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர் பாதுகாப்பு படைகளிடம் அளித்த வாக்குமூலத்தில், பாகிஸ்தானை சேர்ந்த ஏழை இளைஞர்களை தீவிரவாத அமைப்புகள் தங்கள் வலையில் சிக்கவைத்து தீவிரவாதிகளாக மாற்றி வருகின்றன என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் ஊரடங்கு

ஸ்ரீ நகரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு வன்முறை அபாயம் கருதி, 7 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 4 பகுதிகளில் நேற்று ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. குப்வாரா மாவட்டத்தின் ஹண்டுவாரா நகரிலும் நேற்று ஊரடங்கு அமலில் இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் 144 தடை உத்தரவு நீடித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in