14-க்குள் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யாத என்ஜிஓ உரிமம் ரத்து: மத்திய அரசு எச்சரிக்கை
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் முகேஷ் மிட்டல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்கு முறை) சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட பல தொண்டு நிறுவனங்கள் 5 ஆண்டுகளாக (2010-11 முதல் 2014-15) வரையிலான வருடாந்திர வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இறுதியாக வரும் 14-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள் ளது. அவ்வாறு செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் 14-ம் தேதிக்குள் வரவு செலவு கணக்கைச் சமர்ப்பித்து விட்டால் காலதாமத கட்டணம் வசூ லிக்கப்பட மாட்டாது என்றும் இந்த ஒருமுறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்சிஆர்ஏ விதிப்படி தொண்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும் வரவு செலவு கணக்கை எப்சிஆர்ஏ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய் யாத நிறுவனங்களின் உரிமம் புதுப் பிக்கப்பட மாட்டாது. இதன்படி கடந்த 3 ஆண்டுகளில் 7,500 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
