

கேரளாவில் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஏ.கே.சசீந்திரன் மீதான பாலியல் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் போக்குவரத்து அமைச்சராக இருந்த ஏ.கே.சசீந்திரன், பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியது தொடர்பான ஆடியோ, மலையாள டி.வி.க்களில் நேற்று முன்தினம் வெளியானது. இது வெளியான சில மணி நேரத் தில் சசீந்திரன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சசீந்திரன் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. விசா ரணைக்கு தலைமையேற்கும் நீதிபதி குறித்து அடுத்த அமைச் சரவை கூட்டத்தில் முடிவு செய் யப்படும்” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த சசிந்தீரன் நேற்று முன் தினம் கூறும்போது, “குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக நான் பதவி விலகவில்லை. தார்மீக அடிப்படையிலேயே இம்முடிவை எடுத்தேன். எந்தப் பெண்ணிடமும் நான் தவறாக நடந்து கொண்டது இல்லை. இது தொடர்பான எந்த வொரு விசாரணையை சந்திக்கவும் நான் தயாராகவே இருக்கிறேன். முறையாக விசாரணை நடந்தால் உண்மை நிச்சயம் வெளியாகும்’’ என்றார்.