

பிரதமர் நரேந்திர மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்ட பாஜக தலைவர் அமித் ஷா, பிடிஐ செய்தி யாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 32 கோடிப் பேருக்கு நேரடி மானியத்தை வங்கிக் கணக்குகளில் செலுத்தி யதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அரசுக்கு மிச்சமாகி யுள்ளது. இந்தத் திட்டம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருப்பதால் இடைத்தரகர்கள் மற்றும் போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமித் ஷா கூறினார்.