Published : 08 Aug 2016 10:42 AM
Last Updated : 08 Aug 2016 10:42 AM

ராஜஸ்தான் கோசாலையில் 500 பசுக்கள் இறப்பு: சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை- முதல்வர் வசுந்தரா ராஜே தகவல்

ராஜஸ்தானில் தீவனம் கிடைக் காமல் 500 பசுக்கள் இறந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

மாநில அரசு சார்பில் ஜெய்ப்பூர் அருகே இயங்கி வரும் ஹிங் கோனியா பசுக்கள் காப்பகத்தில் (கோசாலை) 8,000 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஜெய்ப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்குகிறது.

இந்நிலையில், இங்கு பணிபுரி யும் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள், தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தீவனம் கிடைக்காமலும், சேறு சகதியில் சிக்கியும் சுமார் 500 பசுக்கள் இறந்ததாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந் தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசு, 2 மூத்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தது.

இதுகுறித்து மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், “கோசாலையில் பசுக் கள் இறந்த சம்பவத்தில் அலட்சிய மாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் அந்த கோசாலையை விரைவில் நேரில் சென்று பார்வையிட உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பிரபுலால் சைனி, கோசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட பசுக்களை உடனடியாக மீட்க உத்தர விட்டார்.

அப்போது அவர் கூறும்போது, “நான் ஒரு விவசாயி. கால்நடை களையும் வளர்த்து வருகிறேன். பசுக்கள் தீவனம் எடுத்துக் கொள்ளாவிட்டால் அவற்றுக்கு ஊட்டி விட்டிருக்கிறேன். தண்ணீர் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

இதனிடையே, கோசாலை பராமரிப்புக்கு ரூ.20 கோடி ஒதுக் கப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங் கப்படாததற்கான காரணம் குறித்து வரும் 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஊழல் தடுப்பு அமைப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசுந்தரா ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x