உத்தராகண்ட்டில் நாளை முதல் இந்திய- அமெரிக்க வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சி

உத்தராகண்ட்டில் நாளை முதல் இந்திய- அமெரிக்க வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சி
Updated on
1 min read

இந்தியா அமெரிக்கா இடையி லான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இருநாட்டு வீரர்களும் இணைந்து, கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

‘யுத் அப்யாஸ்’ என்ற பெயரில், நாளை (14-ம் தேதி) முதல் 27-ம் தேதி வரை, உத்தராகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள சவுபாட்டியாவில் இந்தியா அமெரிக்கா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

தீவிரவாதத்துக்கும், ஊடுருவல் பிரச்சினைகளுக்கும் எதிராக ஐநா சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருநாடுகளும் இணைந்து செயல் பட்டு வரும் நிலையில், பரஸ்பர ஒத்துழைப்பை உறுதிப்படுத் தும் விதமாக இப்பயிற்சி நட வடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக, பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2 வாரங்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 225 வீரர்கள் பங்கேற்பார்கள். இந்திய ராணுவத்தில் இருந்தும் அதே எண்ணிக்கையில் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இருநாட்டு ராணுவத்திலும் உள்ள நிர்வாக கட்டமைப்பு, ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் இதர உபகரணங்கள், பயிற்சி முறை போன்றவை குறித்த அடிப்படை விவரங்களை இருதரப்பினரும் பரஸ்பரம் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, கூட்டு ராணுவ நடவடிக்கைகள், தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு, ஊடுருவல் தடுப்பு உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகளும் இதில் இடம்பெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in