

உத்தரப் பிரதேச காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தை, பிரியங்கா டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் சார்பில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வியூகங்களை வகுக்கும் பொறுப்பு பிரசாந்த் கிஷோர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஐக்கிய ஜனதா தளத்துக்காக வியூகங்களை வகுத்து அந்த கட்சிக்கு அவர் வெற்றியைத் தேடி வந்தார்.
கடந்த மக்களவை, பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் பிரச்சாரத்தை தலைமை யேற்று நடத்தினார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.
எனவே உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இளைய மகள் பிரியங்கா வதேராவை முன்னிறுத்துமாறு பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு சோனியா காந்தியின் ரேபரேலி, ராகுலின் அமேதி மக்களவைத் தொகுதிகளில் மட்டும் பிரியங்கா பிரச்சாரம் செய்து வந்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் அவர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திரிபாதி அண்மையில் தெரிவித்தார்.
இதை உறுதிப்படுத்தும் வகை யில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தை பிரியங்கா வதேரா டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். எனவே உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரியங்கா தலைமையேற்பது உறுதி என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
எனினும் பிரியங்கா விவகாரத் தில் காங்கிரஸ் கட்சியினரிடம் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள தாகக் கூறப்படுகிறது. ஒரு தரப்பி னர் உத்தரப் பிரதேசத்தில் பிரியங் காவை களமிறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், பிரியங்காவை மாநில அரசியலில் முடக்கி போடக் கூடாது, மக்களவைத் தேர்தலின் போது நாடு முழுவதும் அவரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித் துள்ளனர். எதுவாக இருந்தாலும் பிரியங்கா வதேரா தீவிர அரசியலில் களமிறங்கப்போவது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.