

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றபோது, பெரும் கலவரம் நிகழ்ந்தது. பாதுகாப்புப் படையினரை நோக்கி, பிரவினைவாதிகளின் ஆதரவாளர்கள் கற்களை வீசியும், ஆயுதங்களாலும் கடுமையாகத் தாக்கினர். போராட்டக் காரர்களைக் கலைக்க பாது காப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 8 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவிவருகிறது. பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டுள்ளதுடன், வாகன போக்குவரத்தும் முற்றிலு மாக முடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, 8 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, பிரிவினைகள் அறிவித்த பந்த்தை அடுத்து, நேற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படவில்லை. நேற்று காலை மட்டும் ஒருசில வாகனங்கள் மட்டுமே இயங்கின.
பந்நிகாலில் இருந்து பள்ளத் தாக்கு பகுதிக்கு இயக்கப் படும் ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. காஷ்மீர் பல்கலைக்கழகம் தேர்வுகளைப் புதன்கிழமைக்குத் தள்ளி வைத்துள்ளது.
இதற்கிடையே, அனந்த்னாக் மக்களவைத் தொகுதிக்கு இன்று நடைபெறவிருந்த இடைத் தேர்தலை அடுத்த மாதம் 25-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.