மகதாயி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் - அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் குவிப்பு

மகதாயி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் - அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் குவிப்பு
Updated on
1 min read

மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக பாயும் மகதாயி நதி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகளை விசா ரிக்க மகதாயி நடுவர் மன்றத்தை உச்சநீதிமன்றம் அமைத்தது. வட கர்நாடக மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மகதாயி நதியில் இருந்து கலசா பண்டூரி கால்வாய் திட்டம் மூலம் மல்லபிரபா நதிக்கு நீரை கொண்டுசெல்ல க‌ர்நாடக அரசு திட்டமிட்டது.

இதற்கு கோவா மற்றும் மகாராஷ்டிர மாநில‌ அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே கர்நாடக அரசு மகதாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி. நீரை குடிநீருக்காக கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும் என மகதாயி நடுவர் மன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த புதன்கிழமை கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனால் தார்வார், கதக், பெலகாவி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த தீர்ப்பை கண்டித்தும், கலசா பண்டூரி குடிநீர் திட்டத்தை உடனடியாக‌ நிறைவேற்றக் கோரியும் வேளாண் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது வட கர்நாடகாவில் மத்திய அரசின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த அரசு பேருந்துகளும் தாக்கப்பட்டன.

இந்நிலையில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கு கர்நாடக வணிகர் சங்கம், போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையடுத்து முழு அடைப்பு போராட்டத்தின் போது அசம்பா விதங்களை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹூப்ளி, கதக், பாகல் கோட்டை உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஆயிரக்கணக்கான மத்திய ரிசர்வ் படை போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். வட கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in