சோட்டா ராஜனின் தாதா வரலாறு: மும்பை முதல் பாலியில் கைதானது வரை..

சோட்டா ராஜனின் தாதா வரலாறு: மும்பை முதல் பாலியில் கைதானது வரை..
Updated on
2 min read

மும்பையில் பிறந்து அதன் முக்கியப் பகுதியான செம்பூரில் வளர்ந்த சோட்டா ராஜனுக்கு பெற் றோர் வைத்த பெயர் ராஜேந்திர சதாஷிவ் நிக்கல்ஜி. 1980-களில் சினிமா தியேட்டர்களில் கள்ள டிக்கெட் விற்று தனது தொழிலை தொடங்கினார். பிறகு சிறிய திருட்டு மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இவருக்கு, மும்பை கிரிமினல்களில் ஒருவரான ‘படா(பெரிய) ராஜன்’ எனப்படும் ராஜன் நாயர் கும்பலின் அறிமுகம் கிடைத்தது. இவருடன் இணைந்த ராஜன், மும்பையில் கிரிமினல் மற்றும் கடத்தல் நட வடிக்கைகளில் ஈடுபட்டார். இத் துடன், மும்பையின் மூத்த தாதாவான வரதா பாய் எனப்படும் வரதராஜ முதலியாருடனும் ராஜன் தொடர்பு கொண்டிருந்தார்.

மும்பையின் மற்றொரு கும்ப லால் படா ராஜன் கொல்லப்பட, அவரது கும்பலுக்கு ‘சோட்டா (சிறிய) ராஜன்’ என்று பெயருடன் தலைவர் ஆனார்.

பிறகு மும்பையின் முக்கிய தாதா என்று கருதப்பட்ட தாவூத் இப்ராகிமுடன் இணைந்து கிரிமினல் மற்றும் போதைப் பொருள் கடத்த லில் ஈடுபட்ட சோட்டா ராஜன் அவரது நம்பிக்கைக்கு உரியவரா னார். தாவூதுக்காக பல்வேறு நாடுகள் சுற்றிய சோட்டா ராஜன் அங்கெல்லாம் தனது தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். 1980-களின் இறுதியில் பல்வேறு தாதா கும்பல்களின் பிடியில் மும்பை சிக்கியது. அப்போது நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளத் தொடங்கினர். அப்போது சோட்டா ராஜனும் தனியாக நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதால் தாவூதுடன் மோதல் தொடங்கியது.

இதனால் சோட்டா ராஜன் தனது நெருங்கிய சகாவான சரத் ஷெட்டி யால் துபாயின் கடலில் 1992-ல் ஒரு படகில் அழைத்துச் செல்லப் பட்டபோது அவரை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதனை தாவூத் கும்பலை சேர்ந்த சோட்டா ஷகீல் மூலமாக தெரிந்து கொண்ட ராஜன் அதிலிருந்து தப்பி விட்டார். சோட்டா ஷகீல் அப்போது தாவூத் கும்பலில் இருந்தாலும் அவருக்கும் சரத் ஷெட்டிக்கும் இடையே நிலவிய உள்விரோதம் இதற்கு காரணமாக இருந்தது. 2003-ல் சரத் ஷெட்டி கொல்லப்பட்டபோது, அதில் ராஜனின் பெரும் பங்கு இருந்த தாக செய்திகள் வெளிவந்தன. இதனால் தாவூத் - ராஜன் இடை யிலான விரோதம் அதிகரித்தது.

இதனிடையே தாவூதிடம் இருந்து பிரிந்த ராஜன், அல்ஜீரியா மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் தனக்கு கும்பலை ஏற்படுத்திக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடத் தொடங்கினார். இதற்கு தென்னாப்ரிக்காவில் இருந்த விக்கி பட்டேல் என்ற சர்வதேச கிரிமினல் உதவியாக இருந்தார்.

இதற்கிடையே அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் மும்பையில் தாவூத் மூலமாக 1993, மார்ச் 12-ம் தேதி தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில், மும்பை போலீஸார் மற்றும் இந்திய உளவுத் துறையினருக்கு தாவூத் பற்றிய தகவல்களை ராஜன் அளிக்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டது. இதன்மூலம் ராஜ னுடன் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் சிலருக்கு நட்பு ஏற் பட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கும் மதச்சாயம் பூசும் வகையில் ராஜனை ‘இந்து தாதா’ என மும்பை பத்திரிகைகள் குறிப்பிட்டதுண்டு. எனினும் ராஜன் மீது கடந்த 1994-ல் இந்திய உளவுத் துறை சார்பில் கைது உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. 1995, ஜூலை 9-ல் இன்டெர்போல் எனப்படும் சர்வ தேச போலீஸாரால் ராஜன் தேடப் படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டார். அப்போது மலேசியா, ஹாங்காங், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மாறி, மாறி தலை மறைவாக இருந்தார் சோட்டா ராஜன். எனினும் தொடர்ந்து தனது கும்பல் மூலம் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

2000 ஆண்டில் ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் இருந்த சோட்டா ராஜனை தாவூத் இரண்டா வது முறையாக கொல்ல முயன் றார். ஆனால் அது முடியாமல் போனது. அங்கிருந்து தப்பிய ராஜன் ஆஸ்திரேலியாவை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தலைமறை வாக இருந்த ராஜன், சுற்றுலாத் தலமான பாலி சென்றபோது பிடிபட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in