Last Updated : 02 Jun, 2016 08:54 AM

 

Published : 02 Jun 2016 08:54 AM
Last Updated : 02 Jun 2016 08:54 AM

பேரிடர் மேலாண்மை திட்டம் பிரதமர் மோடி வெளியிட்டார்

இயற்கை பேரிடர் ஏற்படும் போது பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகள் பறிபோவதை குறைப்பதற்கான தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.

ஜப்பானின் சென்டாய் நகரில் கடந்த 2015, மார்ச் 18-ம் தேதி இயற்கை பேரிடர் குறைப்புக்கான ஐ.நா.வின் மூன்றாவது உலக மாநாடு நடந்தது. அப்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத் தும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘சென்டாய் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், தற்காப்பு, நிவாரணம், மீட்பு என பல கட்டங்களில் பேரிடர் மேலாண்மை வகுக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறைகளை யும் நெடுஞ்சாணாக ஒருங் கிணைக்கவும் இந்த திட்டம் வழிவகுத்துள்ளது. இயற்கை பேரிடர் ஏற்படும்போது பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும். அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களின் பொறுப்புகள், கடமைகள் என்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தகவல் பரிமாற்றம், மருத்துவ உதவி, எரிபொருள், போக்குவரத்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன’’ என குறிப் பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x