

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த அரசு சார்பில் கடந்த ஆண்டு ஜூலையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அரசு பணம் செலவழிக்கப்பட்டதாகவும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டுக்கு நேற்று சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளை அழிக்க முயற்சிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.