

ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்று வழங்குவதற்காக வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங் களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
மத்திய அரசு ஓய்வூதியதாரர் அல்லது குடும்ப ஓய்வூதியதாரரின் ஓய்வூதியத் தொகையை வழங்கு வதில் கடினமான நடைமுறைகள் எதுவுமில்லை. சம்பந்தப்பட்ட ஓய்வூதியக் கணக்கில், நேரடியாக தொகை வரவு வைக்கப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு நேரில் வர வேண்டிய அவசிய மில்லை.
வாழ்வு சான்று சமர்ப்பிக்கவும், ஓய்வூதியதாரரோ, குடும்ப ஓய்வூதியதாரரோ வங்கிகளுக்கு நேரில் வரத் தேவையில்லை. இதற்காகவே அரசால் நியமிக்கப் பட்ட நபரின் கையெழுத்து அல்லது, ஆதார் அடையாளத்தின் அடிப்படையில் இணையம் மூலமாகவே வாழ்வு சான்றை சமர்ப்பிக்கலாம்.
கடுமையாக நோய்வாய்பட் டுள்ள சமயத்தில், உரிய மருத்துவ சான்றுடன் ஓய்வூதியதாரர் முறைப் படி தகவல் தெரிவித்தால், பணம் செலுத்தும் வங்கியின் பிரதிநிதி ஓய்வூதியதாரரின் வீட்டுக்கோ, மருத்துவமனைக்கோ நேரில் வந்து, வாழ்வு சான்றை பதிவு செய் வார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, ‘ஜீவன் பிரமாண்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தினார். ஒவ் வொரு ஆண்டும் ஓய்வூதியத்தை நீட்டிக்க வாழ்வு சான்றை சமர்ப் பிப்பதற்காக வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டியதில் உள்ள நடைமுறை சிக்கலை தீர்க்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டு வருகிறது.