

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி நேற்று புறப்பட்டார். இதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் உள் ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும். அமெரிக்க தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அவர் களுக்கு கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.
அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசும்போது இருநாடுகளும் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவது குறித்து ஆலோ சனை நடத்துவேன். எனது அமெரிக்க பயணத்தின்போது இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஐ.நா. சபை சீர்திருத்தம்
ஐ.நா. பொது சபை கூட்டத்தின் போது, சர்வதேச பொருளாதாரம், பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகள் குறித்துப் பேச உள்ளேன். ஐ.நா. சபையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை விரைந்து அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் 21-ம் நூற்றாண்டு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை களுக்குத் தீர்வு காண முடியும் என்று பிரதமர் மோடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.