Published : 07 Jan 2014 11:23 AM
Last Updated : 07 Jan 2014 11:23 AM

பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அணுஆயுதம் தாங்கிச் சென்று இலக்கை தாக்கும் சக்தி கொண்ட பிருத்வி-2 ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

500கிலோ முதல் 1000கிலோ எடையில் அணு ஆயுதத்தை சுமந்து சென்று 350 கி.மீ., வரையிலான தொலைவில் இருக்கும் இலக்கை குறி வைத்து தாக்கும் சக்தி வாய்ந்தது பிருத்வி 2 ஏவுகணை.

இன்றைய சோதனையின் போது பிருத்வி-2 ஏவுகணை திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக சந்திப்பூர் ஏவுகணை ஏவுதள மைய இயக்குநர் வி.கே.வி. பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கடைசியாக பிருத்வி-2 ரக ஏவுகணை, அக்டோபர் 7-ஆம் தேதி சோதிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியும் சோதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x