யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் ‘விவிபாட்’ வாங்க ரூ.3,174 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் ‘விவிபாட்’ வாங்க ரூ.3,174 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
2 min read

தேர்தலில் யாருக்கு வாக்களித் தோம் என்பதை வாக்காளர் கள் தெரிந்துகொள்வதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்களை (விவிபாட்) வாங்க மத்திய அரசு ரூ.3,174 கோடி ஒதுக்கி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளி லும் பயன்படுத்தப்படும் 16 லட்சத்து 15 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் விவிபாட் இயந்திரத்தைப் பொருத்த ரூ.3,174 கோடி நிதி ஒதுக்குமாறு தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.

இது தொடர்பாக, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 38 முறை மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடந்த ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி பிரதமருக்கும் சட்ட அமைச்சகத் துக்கும் இதுதொடர்பாக நினை வூட்டல் கடிதம் எழுதி இருந்தார்.

இதனிடையே, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபாட் இயந்திரங்களைப் பொருத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத் திலும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், எப்போது நாடு முழுவதும் இந்த இயந் திரத்தைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இசிஐஎல்) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ப ரேஷன் (பெல்) ஆகிய 2 பொதுத் துறை நிறுவனங்களில், சுமார் 16 லட்சம் விவிபாட் இயந்திரங்களைத் தயாரிக்க 30 மாதங்கள் ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

சமீபத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், உத்தரா கண்ட் மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதை யடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங் களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அத்துடன், வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி 16 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணைய கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் விவிபாட் இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.3,174 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி, முதல்கட்ட மாக நடப்பு நிதியாண்டில் ரூ.1,600 கோடி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டில் மீதம் உள்ள தொகை ஒதுக்கப்படும்.

2019 தேர்தலில் அறிமுகம்

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை யில், “விவிபாட் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2019 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதற்கு முன்பாக இயந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்படும் விவிபாட் இயந்திரம், வாக்காளர் கள் வாக்களித்தவுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கும். அதில் வாக்காளர் வாக்களித்த சின்னம் அச்சாகி இருக்கும். இதை வைத்து, தாம் பதிவு செய்த சின்னத்தில்தான் வாக்கு பதிவானதா என்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.

எனினும் இந்த சீட்டை 7 விநாடி கள் மட்டுமே பார்க்க முடியும். அதை வாக்காளர்கள் எடுத்துச் செல்ல முடியாது. இந்தமுறை 2013-ல் முதன்முறையாக சோதனை அடிப் படையில் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் போதுமான அளவில் கையிருப்பு இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே இப்போது பயன்படுத்தப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in