வரும் பிப்ரவரி மாதத்தில் ஒரே நேரத்தில் 103 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

வரும் பிப்ரவரி மாதத்தில் ஒரே நேரத்தில் 103 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்
Updated on
1 min read

திருப்பதியில் நடைபெற்று வரும் 104-வது தேசிய அறிவியல் மாநாட்டில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

வரும் பிப்ரவரி மாதத்தில் 83 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. இதில் 80 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை யாகும். இதில் அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த மைக்ரோ செயற்கைக்கோள் களும் அடங்கும்.

ஆனால் மேலும் 20 நாடு களின் செயற்கைக் கோள்களை யும் சேர்த்து அனுப்ப வேண்டி இருப்பதால், மொத்தம் 103 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் 22 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியதே நமது சாதனையாக இருந்தது. இந்த சாதனை முறியடிக்கப்பட உள்ளது.

மேலும் ஜி.சாட் செயற்கைக் கோள் மார்ச் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா, இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகள் பயன்பெறும். இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in