

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் இருக்கை தகராறு காரணமாக ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
புனேயிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் பயணம் செய்தார் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். தனது டிக்கெட் பிசினஸ் கிளாஸுக்கானது ஆனால் இகானமி கிளாஸ் கொடுத்தனர் என்பதில் தகராறு எழுந்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்த ஒட்டுமொத்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, உட்காரும் இருக்கை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா ஊழியரைத் தாக்கியதாக ஒப்புக் கொண்டார்.
“ஆம்! நான் தாக்கினேன், அவர்களது வசைகளை நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்றார்.