

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி நாளை (நவம்பர் 2ம் தேதி) பாட்னா செல்கிறார். அங்கு கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
கடந்த 27- ஆம் தேதியன்று பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற பேரணியின் போது 7 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர், 83 பேர் காயமடைந்தனர்.
அக்.27-ல் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர், மோடி பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் . இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.
குறிப்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். இத்தகைய சூழலில், நரேந்திரமோடி நவம்பர் நாளை பாட்னா செல்கிறார்.
நரேந்திர மோடி வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.