

ஹரியாணாவில் இரு பிரிவினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
ஹரியாணாவில் சிர்சா மாவட்டத்தில் புதன்கிழமை காலை இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
இது குறித்து சிர்சா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதாவது, "சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வேளையில் மோதல் வெடித்துள்ளதால். இது காட்சி சார்ந்த மோதலா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.