

‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் டெல்லி பதிப்பு 30 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 11, 2016-ல் ‘தி இந்து’ நாளிதழ் தனது 30-வது ஆண்டை நிறைவு செய்ததைக் கேள்வியுற்று பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
‘தி இந்து’ டெல்லி பதிப்பு வெளியானது முதல் நான் அதன் தீவிர வாசகன். கடந்த 30 ஆண்டு களாக ‘தி இந்து’வின் டெல்லி பதிப்பு, வட இந்தியாவில் பரவ லாகவும், தலைநகரப் பகுதியிலும் முக்கியமான அங்கமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
துடிப்பான ஜனநாயகத்தில் செய்தித்தாள்கள் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன. தேசத்தின் தலைவிதியை நிர்ண யிக்கும் ஆற்றல்மிக்க சாதனமாக அவை திகழ்கின்றன. ‘தி இந்து’ கடந்த 138 ஆண்டுகளாக நம் நாட்டின் மனசாட்சியாக இருந்து வருகிறது. சுதந்திரப் போராட்டத் தில் பங்கேற்றதுடன், ஜன நாயகக் குடியரசைப் பேணுவதி லும், அதன்மூலம் அனைத்துக் குடிமகன்களுக்கும் அடிப்படை சுதந்திரம் மற்றும் நீதி கிடைக்கச் செய்வதற்கான நமது பெருமுயற்சியில் ‘தி இந்து’ தனது பங்களிப்பை நல்கியே வந்துள்ளது. மக்களின் கருத்தை செம்மைப்படுத்துவதிலும், தாக்கம் செலுத்துவதிலும், சமநிலை தவறாத செய்திகளை அளிப்பதிலும் பங்காற்றுகிறது.
நடுநிலைமை, சுதந்திரம், அச்சமின்மை, உண்மை ஆகியவற்றின் அடிப்படையில் தனது ஊடகப் பணியை ‘தி இந்து’ தொடரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
‘தி இந்து’ டெல்லி பதிப்பின் அனைத்து ஊழியர்களுக்கும், எதிர்காலம் சிறக்கவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் பிரணாப் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.