Last Updated : 05 Sep, 2016 10:20 AM

 

Published : 05 Sep 2016 10:20 AM
Last Updated : 05 Sep 2016 10:20 AM

காஷ்மீர் முதல்வர் மெகபூபாவுடன் அனைத்துக் கட்சி குழு ஆலோசனை

காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளது. அங்கு, முதல்வர் மெகபூபா முஃப்தி உட்பட பல்வேறு தரப்பினருடன் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காஷ்மீருக்கு 29 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஒரிருவர் விலக, நேற்று 26 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு காஷ்மீர் வந்தடைந்தது.

ராஜ்நாத் சிங் தலைமையில் ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச கருத்த ரங்க மையத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில், காஷ்மீரின் தற்போதைய நிலை, பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகி தீன் இயக்க தீவிரவாதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் கொல்லப்பட் டதைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களால், இது வரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். 6,600க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர்.

இதனிடையே இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அமைதியைத் திரும்பக் கொணர முடியும் என அனைத்துக் கட்சிக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

“அனைத்துக் கட்சிக் குழு பேச்சு வார்த்தையில் அனைத்துத் தரப்பின ரும் பங்கேற்பது அவசியம்” என மாநில கல்வித் துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத தலைவர் களுக்கு பேச்சுவார்த்தையில் பங் கேற்க முதல்வர் மெகபூபா முப்தி, மக்கள் ஜனநாயக கட்சியின் தலை வர் என்ற முறையில் அழைப்பு விடுத்துள்ளார். பிரிவினைவாத தலைவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில் அவர்களிடம் புறவாசல் வழியாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படு கிறதா என்ற கேள்விக்கு நயீம் அக்தர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தேசிய மாநாட்டுக் கட்சி பிரதிநிதிகள் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்திக்கவுள்ளனர்.

“தனி மனிதர்கள், குழுக்கள் என காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கு விரும்பும் அனைத்துத் தரப்பினரு டனும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்” என ராஜ்நாத் சிங் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், “அனைத்துத் தரப்பினரையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். இக்குழுவின் பய ணம் காஷ்மீருக்கும், நாட்டுக்கும் நன்மை தருவதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இரு மாதங் களுக்கு முன்பே அனைத்துக் கட்சிக் குழு வந்திருக்க வேண்டும். எனி னும் இப்போதும் நம்பிக்கை உள் ளது. எங்களால் மாறுபாட்டைக் காட்ட முடியும். பிரிவினைவாத தலைவர்களையும், காயமடைந் தவர்களையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

லோக் ஜனசக்தி கட்சித் தலை வரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் இக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பேச்சு நடத்த மறுப்பு

பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதல்வர் மெகபூபா முப்தி விடுத்த அழைப்பை பிரிவினைவாத தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் சயீத் அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் பரூக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், மெகபூபாவையும் அவரது அழைப்பையும் குப்பை என விமர்சித்துள்ளனர்.

மேலும், ‘இந்த பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க வஞ்சகம். நாடாளு மன்ற பிரதிநிதிகள் குழுவின் இந்த பேச்சுவார்த்தை மக்களின் பாதிப்பை நீட்டிக்கவே செய்யும். ஜம்மு காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமை என்ற மையப் பிரச்சினை குறித்த வெளிப்படையான தீர்மானத்தின் அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்கு மாற்றாக இது அமையாது. இதுதான் எங்களின் உறுதியான நிலைப்பாடு.

ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடு படப் போவதில்லை. அரசியலைப் பொருத்தவரை, இந்தியா தனது பிரதிநிதிகள் மற்றும் காட்டிக் கொடுக்கும் கயவர்கள் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக வஞ்சகம், இரட்டைப் பேச்சு ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மெகபூபா, தனது கடிதத்தில் இந்திய நாடாளு மன்றக் குழுவுக்கு நன்றி தெரிவித்திருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் மெகபூபாவின் செயல்பாடு, மத்திய அமைச்சரைக் கூட தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது’ என கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x