சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து! - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து! - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரம் அல்லது தேர்தல் தொடர்பான பணிகளில் சிறுவர்களை அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தினால், அக்கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று தெரி வித்தது.

தேர்தல் பணிகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசா ரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணை யம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “அரசியல் கட்சி களின் பதிவை எங்களால் ரத்து செய்ய முடியாது. ஆனால் கட்சிகள் இதுபோன்ற சட்ட மீறலில் ஈடுபட்டால் அவற்றின் அங்கீ காரத்தை ரத்துசெய்ய எங் களுக்கு அதிகாரம் உள்ளது. இதன்படி அக்கட்சிகளின் சின்னம் முடக் கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராஜகோபால் கூறும்போது, “தேர்தல் தொடர்பான பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடந்த மே 2013, செப்டம்பர் 2014 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதியுள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “தேர்தல் பணிகளில் சிறுவர் களை சுயேச்சை வேட்பாளர்கள் ஈடுபடுத்தினால் அவர்கள் மீது என்ன நவடிக்கை எடுப்பீர்கள்?” என்றனர்.

இதையடுத்து இது தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கை 2 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in