Published : 16 Oct 2014 08:26 AM
Last Updated : 16 Oct 2014 08:26 AM

ஹரியாணா 73%, மகாராஷ்டிரா 64% வாக்குப்பதிவு: சட்டப்பேரவைத் தேர்தலில் வன்முறை, துப்பாக்கிச் சூடு; 32 பேர் காயம்

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடந்தது. ஹரியாணாவில் 73 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிர மாநிலத்தில் 64 சதவீத வாக்குகளும் பதிவாகின.

மொத்தம் 288 தொகு திகள் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கும், 90 தொகு திகள் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங் கியது

ஹரியாணா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குருஷேத்ரா, யமுனாநகர், கைதால், படேபாத், மேவட், சர்சா ஆகிய ஆறு மாவட்டங்களில் சாதனை அளவாக 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

துப்பாக்கிச் சூடு

ஹரியாணா மாநிலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங் களில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியினருக்கும் பாஜகவின ருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஹிசார் மாவட்டத்தில் நடை பெற்ற மோதல்களில் 10 போலீஸார் உட்பட 30 பேர் காயமடைந்தனர். 7 பைக்குகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

சிர்சா பகுதியில் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர்.

சிர்சா பகுதியில் முன்னாள் அமைச்சர் கோபால் முண்டேவின் ஹரியாணா லோகித் கட்சியின ருக்கும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியினருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இதில், கோபால் முண்டே ஆதரவாளரின் கார் சேதமடைந்தது.

நார்நவுண்ட் பகுதியில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியினர் வாக்குப்பதிவு மையத்தைக் கைப்பற்ற முயன்றதாக, பாஜகவின் முதல்வர் வேட்பாளர் அபிமன்யு குற்றம்சாட்டியுள்ளார்.

காவலர் பலி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், வார்தா மும்பையில் செவ்ரி, நாசிக் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால், வாக்குப்பதிவு சிறிது தாமதமானது.

விதர்பா, சாவ்னெர் தொகுதியிலுள்ள அவ்தேகாட் வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மின்னல்தாக்கி பலியானார். பல்வேறு இடங்களில் மழை பெய்ததால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

பிரபலங்கள் வாக்களிப்பு

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண், முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் வினோத் தாவ்தே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாஜக மாநில தலைவர் தேவேந்திர பத்நாவிஸ், இந்தி திரைத்துறை பிரபலங்கள் ஷாருக் கான், ரேகா, ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன், அமோல் பலேகர், ஹேமா மாலினி, அனுபம் கெர், சல்மான் கான், சோனாலி பிந்ரே உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

கட்சிகள் நம்பிக்கை

மோடி அலை இரு மாநிலங் களிலும் ஆட்சியமைக்க உதவும் என பாஜக நம்பிக்கை தெரிவித் துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “மாற்றம், நல்ல நிர்வாகம், நரேந்திர மோடி வழங்கி வரும் முடிவெடுக்கும் திறன் கொண்ட அரசுக்காக மக்கள் வாக்களிக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி, “மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு பூர்த்தி செய்யவில்லை. அதன் எதிர்விளைவுகளை மகாராஷ்டிரத்தில் பாஜக சந்திக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண் கூறும்போது, “கடந்த 15 ஆண்டு களில் மேற்கொண்ட நலப்பணி களுக்காக மக்கள் மீண்டும் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்து வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித் துள்ளார்.

இடைத்தேர்தல்

மகராஷ்டிர மாநிலம் பீட் மக்களவைத் தொகுதி மற்றும் ஒடிஸா கந்தமால் மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 19-ம் தேதி நடை பெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x