

ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நவம்பருடன் முடியும் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்திடம் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் முறையிட்டன. ஆனால் அந்த மனுக்களை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெறும் ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தேவ், எஸ்.ஏ. போப்டே ஆகியோர், தொலைத்தொடர்பு துறையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதை ஏற்க முடியாது. தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை. ஏலத்துக்கு தடை விதிக்க முடியாது என்றனர். -பி.டி.ஐ.