

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத் துக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைத்து, கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, பொருளாதார வல்லுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திலீப் அப்ரீ (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்), பிரணாப் பரதன் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), வி.பாஸ்கர்( டெக்சாஸ் பல்கலைக்கழகம்), அபிஜித் சென் (முன்னாள் திட்டக்குழு உறுப்பினர்), திலீப் முகர்ஜி (பாஸ்டன் பல்கலைக் கழகம்) உள்ளிட்ட 28 பொருளாதார வல்லுநர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தால், லட்சக்கணக்கான ஏழைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் செலவினங்களை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
பாஜக தலைமையிலான புதிய அரசு, இத்திட்டத்தைச் செயல் படுத்துவதில்அக்கறை செலுத்த விரும்பவில்லை என்பதும், முடிந்த அளவுக்கு கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. தற்போது நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்களில் மட்டும் இத்திட்டம் அமலில் இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்தியாவின் வளம் மிகுந்த மாவட்டங்களில் கூட வேலை யில்லாத் திண்டாட்டத்தை காண முடிகிறது. எனவே, இந்த திட்டத்தில் குறைகள் இருந்தால், அதை சரிசெய்து வெற்றி கரமாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.